என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கமாரி (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம்  ஊரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு சிவகாசியில் வசித்தனர்.

    சிவகாசியில் தங்கமாரி சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்து 7 மாதம் ஆன நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற போது டாக்டர் அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு  16 வயது என்பது தெரியவந்தது. 

    இது குறித்து டாக்டர், கள்ளிக்குடி சமூக நல அலுவலர் பேபி ஜீவசெல்வமணிக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் அதிகாரி செல்வமணி அங்கு வந்து விசாரணை நடத்தி இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

    இதன் அடிப்படையில் வாலிபர் தங்கமாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×