search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதிய பஸ் நிலையம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செம்மண்டலத்தில் ஒரு பல்லடுக்கு மேம்பாலமும் , ஜவான்ஸ் பவன் முதல் தினத்தந்தி வரை ஒரு போக்குவரத்து மேம்பாலமும் , முதுநகரில் போலீஸ் நிலையம் முதல் எம்.ஜி.ஆர் . சிலை வரை ஒரு போக்குவரத்து மேம்பாலமும் அமைத்திட வேண்டும்.

    கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள அரசு இடத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், விவசாயக் கல்லூரியும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், மனோகரன், கிருஷ்ணமூர்த்த , நடராஜனன், மாயவேல், இளங்கோவன் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் கோமதிநாயகம், கல்யாண்குமார், ஆறுமுகம், காசிநாதன், ரவிச்சந்திரன், கண்ணபிரான், கோபால், சண்முகம், ரங்கநாதன் பச்சையப்பன், ஜெகன், மாரியப்பன், மஞ்சினி, வீராசாமி, கண்ணன், அமர்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் உதவி பொதுச்செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.
    Next Story
    ×