என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  குமாரபாளையத்தில் கோடைக்கு இதமான நுங்கு விற்பனை தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பகுதியில்  வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

  கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.

  அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.

  வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக்  கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.

   இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×