search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    ஏப்ரல் முதல் ஜூலை வரை 4 மாதங்களில் 40 லட்சம் திருமணம்

    கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் ஆடம்பர திருமணங்கள் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்ஸ் பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
    சென்னை:

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமணங்கள் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக நடைபெறவில்லை. கட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக எளிமையாக நடந்தது.

    கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் ஆடம்பர திருமணங்கள் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்ஸ் பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த மாதத்தில் இருந்து மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற தொடங்கிவிட்டன.

    கடந்த வாரம் தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ராஸ்மாடாஸ் குழுமத்தின் திருமண கண்காட்சி மிகவும் ஆடம்பரமாக நடந்தது. தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் நடந்த இந்த திருமணக் கண்காட்சி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை காட்டியது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை நாடு முழுவதும் 40 லட்சம் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதை ஐ.டி.சி. கிராண்ட்சோழா நட்சத்திர ஓட்டல் பொதுமேலாளர் கபின் சாங்கட்வான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது ஐ.டி.சி.கிராண்ட் சோலாரில் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் உள்ளன. அறைகளில் தங்கும் வருவாய் கிட்டதட்ட இரட்டிப்பாகும். விருந்து வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

    வெளிப்புறங்களில் இருந்தும் எங்களுக்கு திருமணங்களுக்கான உணவு ஆர்டர் வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமணங்கள் மூலம் ஜவுளி, நகைகள், கார்கள் விற்பனை மிகப்பெரிய அளவில் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக நகை கடையின் உரிமையாளர் ஒருவர் கூறும்போது:-

    இந்த கோடையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். திருமண நிகழ்ச்சிக்காக புதிய வகை பிராண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். நகை விற்பனை அதிக அளவில் இருக்கும் என்றார்.

    பட்டுப்புடவை கடை உரிமையாளர், ஒருவர் கூறும்போது, மணப்பெண் அணியும் முகூர்த்த பட்டுப்புடவைகள் மட்டுமின்றி செமி காட்டன், ஆர்கான்கள், லைட் சில்க்ஸ் போன்ற இலகுவான புடவைகளுக்கும் அதிக தேவைகள் உள்ளது.

    திருமணத்திற்காக புதிய வாகனங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தற்போது பற்றாக்குறை காணப்படுகிறது. இது குறித்து கார் நிறுவன ஏஜெண்டு ஒருவர் கூறும்போது, பொதுவாக நாங்கள் திருமணத்திற்காக டெமோ அல்லது டெஸ்டிங் டிரை கார்களை வழங்குகிறோம். ஏனென்றால் தேர்வு செய்யப்பட்ட கார்களை டெலிவரி செய்ய 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. திருமணத்திற்காக எங்கள் டெமோ கார்களை அலங்கரித்து கொடுக்கிறோம். பின்னர் புதிய காரை தொழிற்சாலையில் இருந்து வரவழைத்து கொடுக்கிறோம் என்றார்.

    Next Story
    ×