என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய விஜய் வசந்த்
விவேகானந்தா கல்லூரி ஆண்டு விழாவில் விஜய் வசந்த் பங்கேற்பு
தனது தந்தை பயின்ற கல்லூரியில் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது மகிழ்ச்சியளித்ததாக, விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தன்னம்பிக்கையை ஆயதமாக்கி வாழ்வில் முன்னேற மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இத்தகவலை விஜய் வசந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது தந்தை பயின்ற கல்லூரியில் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது மகிழ்ச்சியளித்ததாக, விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரி நிர்வாகம் சார்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி தேவை என கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்றுக் கொண்டு ஆவன செய்யப்படும் என உறுதியளித்ததாகவும் விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
Next Story