search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குவாரியில் ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள்
    X
    குவாரியில் ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள்

    நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள்-கலெக்டர் விஷ்ணு பேட்டி

    நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு கூறினார்.
    நெல்லை:

    நெல்லை அருகே அடைமிதிப்பான் குளத்தில் விபத்து நடந்த கல்குவாரியில்   மாவட்ட கலெக்டர் விஷ்ணு  இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அடைமிதிப்பான் குளத்தில் உள்ள குவாரியில் கடந்த 14-ந் தேதி ஏற்பட்ட சரிவில் சிக்கியவர்கள் 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ளனர். இதில் விபத்து நடந்த 6 மணி நேரத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 8 நாட்களாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள், மண்ணியல் துறை, வல்லுநர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த மீட்பு பணியை நடத்தி முடித்துள்ளோம்.

    சம்பவம் நடந்த மறுநாளே குவாரியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்வதற்கு 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில்வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் போலீஸ் தரப்பில் இருந்து அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குழுவாக செயல்பட்டு குவாரிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஒவ்வொரு குழுவும் துணை கலெக்டர் தலைமையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் 3 கனிம வளத்துறை அதிகாரி கள்,2 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் 6 குழுக்களுக்கும் 18 கனிம வளத்துறை அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களில் இருந்து வர வழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது முழுமையான ஆய்வுக்கு பின்னர் முறைகேடு நடைபெற்ற குவாரிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தற்போது 3 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்கள் வாங்கப்படாமல் இருக்கிறது.அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    அரசு அறிவித்துள்ள நிவாரணம் மற்றும் அரசு அறிவித்துள்ள பிற சலுகைகள் அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஆர்.டி.ஓ சந்திரசேகர், தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
    Next Story
    ×