என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  விவசாயிகள் நலன் கருதி பாபநாசம் அணையில் இருந்து 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாயிகள் நலன் கருதி பாபநாசம் அணையில் இருந்து 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம்  கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

   பாபநாசம் காரையார் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி சாகுபடிக்காக  தண்ணீர் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கால்வாய் மூலமாக வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம் வரையில் சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் .

  தற்போது பாபநாசம் அணையில் 60 அடிக்கு மேலாக நீர் இருப்பு உள்ளதால் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் கன்னடியன் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனை தண்ணீர் திறப்பதற்கு முன்பு தூர்வாரி சீரமைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

  மேலப்பாளையத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பெரும்பாலான கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

   இதுதவிர விளம்பர பதாகைகள், சிமெண்ட் தளம் உள்ளிட்டவையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
  Next Story
  ×