search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சன்புதூர் பகுதியில் சின்ன வெங்காய சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
    X
    அச்சன்புதூர் பகுதியில் சின்ன வெங்காய சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    செங்கோட்டையில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம்

    தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட செங்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
    செங்கோட்டை:

    தமிழ்நாட்டில் தென்மாவட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியில் தென்காசி மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 800 ஏக்கர்  பரப்பளவில்  சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

    மேற்குதொடர்ச்சி அடிவார பகுதியான செங்கோட்டை தாலூகா வுக்கு உட்பட்ட செங்கோட்டை நகர்பகுதி, கணக்கபிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் சித்திராபுரம், நெடுவயல், அச்சன்புதூர் சிவராமபேட்டை, கொடிகுறிச்சி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும்  சாகுபடி செய்யப்படுகிறது. இதனைநம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதி விவசாயிகள் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஆகிய முன்று மாதங்களில் பூமகசூலான வெங்காயம்,  மல்லி, துவரை, மோச்சை, பயறு வகைகள் உள்ளிட்ட வைகளை தென்மேற்கு பருவமழையை நம்பி பயிரிடுவர்.

    அவற்றுள் பெரும்பாலானோர் 70 நாள் பயறும் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்வது வழக்கமாக செய்துவருகின்றனர்.

     ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட 600கிலோ தேவை, இதற்கான உள்ளி விதைகளை திண்டுக்கல் பகுதிகளிலிருந்து ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கிவந்துள்ளனர். இவ்வாறு பயிரிட சாராசரியாக உழவு, பாத்தி கெட்டுதல், இயற்கை உரம் என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்கின்றனர்.

    70 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு 7000 முதல் 7200 கிலோ சின்ன வெங்காயம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பாண்டில் தென்காசி மாவட்டத்தில் 800 ஏக்கருக்கு மேல் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்தனர்.

     இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் சின்ன வெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் பயிறுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

    பெரும்பாலானோர் இயற்கை உரங்களான மண்புழு, எறுசாணம், வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணை உள்ளிட்டவையே உபயோகித்து வருவதால் இங்கு விளையும் சின்ன வெங்காயத்திற்கு மதிப்பு கூடுதல் என்பதால் வியாபாரிகள் வாங்கி செல்வதில் அதிகளவில் ஆர்வம்  காட்டிவருகின்றனர்.
    Next Story
    ×