என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  கடலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கீழ் பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகள் அஞ்சலி (வயது 12). அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று மாலை ஆணையம்பேட்டை பெருமாள் ஏரி பாசன வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

  இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×