என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பம் தீப்பிடித்து எரிந்த காட்சி.
    X
    மின் கம்பம் தீப்பிடித்து எரிந்த காட்சி.

    மின்கம்பத்தில் திடீர் தீவிபத்து

    லாஸ்பேட்டையில் மின்கம்பத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை முத்துலிங்கபேட்டை பகுதியில் முத்துமாரியம்மன்  கோவிலில் திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து ஒரு ஒயர் தனியாக தொங்கி உள்ளது. இதில் திடீரென  தீப்பொறி ஏற்பட்டு  வெடித்து சிதறியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். மின் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
    Next Story
    ×