என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிவாரண உதவிகளை முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கிய காட்சி.
    X
    நிவாரண உதவிகளை முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கிய காட்சி.

    குவாரி விபத்தில் பலியான 3 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

    நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்கள் குடும்பத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
    நெல்லை :

     அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் பலியான நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கநேரி ஊராட்சி இளையார்குளம் செல்வன், அரியகுளம் ஊராட்சி  ஆயர்குளம் முருகன், செண்பகராமநல்லூர்  ஊராட்சி காக்கைகுளம் செல்வகுமார் ஆகியோர் குடும்பத்தினரை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து பலியான 3 பேரின் குடும்பங்களுக்கும் அவர் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் வழங்கினார்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா,  மாமன்ற உறுப்பினர்  சந்திரசேகர், பாளை முன்னாள் தொகுதி செயலாளர் சரவணன், மலையன்குளம் சங்கரலிங்கம், நாங்குநேரி  பரமசிவன்,  முத்தூர் நயினார், தருவை செல்லத்துரை ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×