என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவலார்பட்டி கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிய காட்சி.
    X
    சிவலார்பட்டி கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிய காட்சி.

    விளாத்திகுளம் அருகே மக்கள் குறைகேட்பு கூட்டம்

    விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி கிராமத்தில் மக்களிடம் குறைகள் கேட்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரிப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் அருகே சிவலார்பட்டி கிராமத்தில் மக்களிடம் குறைகள் கேட்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரிப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் என பல தரப்பினரையும் இணைத்து அனைவரின் பங்களிப்போடு ஒரு கிராமத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகள், நடவு செய்து பாதுகாப்பு வேலி அமைத்து வளர்ப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வேளாண்மை, கல்வி, சுகாதாரம், மருத்துவம் மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை தொடர்பான கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து உரிய தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பாஸ்கரன், புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கல்பனா தேவி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், மும்மூர்த்தி, சின்ன மாரிமுத்து, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×