search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை சுத்தி நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
    X
    விதை சுத்தி நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான விதை நெல் தயார் - விதை சுத்தி நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

    குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில், விதை சுத்தி நிலையங்களில், 18 ஆயிரத்து, 518 டன் விதை நெல் விதைகள் தயாராகியுள்ளது

    திருப்பூர்:

    தமிழகத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும், பெரும்பாலான மாவட்டங்களுக்கு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 70 விதை சுத்தி நிலையங்களில், பல்வேறு ரக நெல் விதைகள் உற்பத்தி செய்து, விதை சுத்தி உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இப்பகுதிகளில், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து, வயல்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, கலவன்கள் இல்லாமல், அதிக முளைப்புத்திறன், மகசூல் கிடைக்கும் வகையில், விதை நிறுவனங்கள் பல்வேறு ரக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தற்போது, குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில், விதை சுத்தி நிலையங்களில், 18 ஆயிரத்து, 518 டன் விதை நெல் விதைகள் தயாராகியுள்ளது. மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணை மற்றும் துங்காவி, கணியூர், கொழுமம் பகுதியிலுளள்ள தனியார் விதை சுத்தி நிலையங்களில், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.

    ஆய்வில், விதை சுத்தி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் வயல் மட்ட விதைக்குவியல்கள், சுத்தி செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள், சான்று செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள் மற்றும் விதை சுத்தி நிலைய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. உதவி இயக்குனர் கூறியதாவது:-

    தமிழக நெல் சாகுபடிக்கு தேவையான பெரும்பகுதி, நெல் விதை, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. விதை சுத்தி நிலையங்களில் தொடர் ஆய்வு செய்து, தரமான விதை உற்பத்தியை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

    Next Story
    ×