search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.

    2½ டன் பாலித்தீன் பைகள், டம்ளர்கள் பறிமுதல் - மேயர் தினேஷ்குமார் ஆய்வு

    கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நேற்று 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட எம்.ஜி.புதூர், காமாட்சியம்மன் கோவில் வீதி, ஜம்மனை வீதி ஆகிய பகுதிகளில் சுகாதார அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 2 கடைகள் மற்றும் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர்.

    ஜம்மனை வீதியில் உள்ள கடைக்கு அருகே இருந்த குடோனில் இருந்து 2½ டன் எடையுள்ள பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் 2 கடைகளில் இருந்து 1 டன் பாலித்தீன் பைகள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், டம்ளர்களை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார். பாலித்தீன் பைகள், டம்ளர்களை வாங்கி விற்பனை செய்யவோ, மக்கள் பயன்படுத்தவோ கூடாது என்று தெரிவித்தார். மண்டல தலைவர் கோவிந்தராஜ் உடனிருந்தார்.

    Next Story
    ×