என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய விருது
ஊராட்சிக்கு தேசிய விருது
சிவகங்கை மாவட்டம் துவார் ஊராட்சிக்கு தேசிய விருது கிடைத்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் ஊராட்சி உள்ளது. இது பூலாம்பட்டி, கருமிச்சான்பட்டி, துவார் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
இந்த கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவராக செ.சரவணன் உள்ளார். ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதல் தான் மட்டு மில்லாமல் தன்னோடு இணைந்து பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் ஆகியோ ரோடு கைகோர்த்து பணியாற்ற தொடங்கினார்.
மேலும் அடிப்படை கட்டமைப்பை இந்த கிராமத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காக 11 பேர் கொண்ட குழுவை நியமித்து அதற்கு தானே தலைவராக இருந்து இப்பகுதியில் அத்தியாவசிய தேவையாக கருதப்படுகின்ற நல்லகுடிநீர், மின்சாரம், தரமான சாலை முதலிய அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கவேண்டுமென தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
இவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த போதிலும், தான் ஏற்படுத்திய குழுவோடு ஒன்றிணைந்து மாவட்ட நிர்வாகத்தை அவ்வப்போது அணுகி சுகாதாரம், கல்வி குறித்த விழிப்புணர்வு, இளைஞர்களுக்கானவேலைவாய்ப்பு முகாம்களை நடத்தினார்.
தான் பதவியேற்ற காலத்தில் 2 மகளிர் சுய நிதி குழுக்கள் இயங்கி வந்த நிலையில் தற்சமயம் 17-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கினார். இதுபோன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்களை இடைவிடாது நிறைவேற்றி வந்த சரவணனின் செயல்பாட்டின் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக முகமை திட்ட அலுவலர்களின் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வரிடம் தேசிய அளவிலான சிறந்த வளர்ச்சி திட்ட ஊராட்சிக்கான விருதினையும், பாராட்டு தலையும் பெற்றுள்ளார்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கூறுகையில், தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள அனைவரும் குழுக்களாக ஒன்றிணைந்து ஒற்றுமையோடு பாடுபட்டால் வரும் காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியையும் சிறந்த ஊராட்சியாக நிச்சயமாக மாற்ற முடியும் என்றார்.
Next Story






