search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பில் மழை பெய்து வருவதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
    கூடலூர்:
    அசானிபுயல் காரணமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 130.15 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 505 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4732 மி.கனஅடியாக உள்ளது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 67.29 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 106.27 அடியாகவும் உள்ளது.

    தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் எனவும், ஜூன் மாதம் முதல்வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குபகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×