search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தரிப்புலம் ஊராட்சியில் பண்ணை குட்டை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு ெசய்தார்.
    X
    கத்தரிப்புலம் ஊராட்சியில் பண்ணை குட்டை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு ெசய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு

    வேதாரண்யம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

     வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கத்தரிப்புலம், செட்டிபுலம், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும், நாகக்குடையான், கத்தரிப்புலம் ஊராட்சியில் 'நடைபெற்று வரும் வீடு கட்டும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தென்னம்புலம், கருப்பன்காடு பகுதி வரை பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.596.43 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் தகட்டூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், கத்தரிப்புலம், தகட்டூர் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினையும்ெசட்டிப்புலம், ஆயக்காரன்புலம்-4 ஊராட்சிகளில் தலா ரூ.1.76 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புனரமைக்கும் பணியினையும், 

    ஆயக்காரன்புலம்-4ம் சேத்தியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அப்பணியினை விரைந்து முடிக்க  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
    பின்னர், வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யாசெடி நடவுவயல், தென்னை  முந்திரி ஒட்டுக்கன்றுகள், முருங்கை கன்றுகள் போன்றவைகள் உற்பத்தி செய்வதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் ஜான்பிரிட்டோ, இளநிலை பொறியாளர் அருண்ராஜ், ஒன்றிய பொறியாளர்கள் வேல்கண்ணன், ஜான்பிரிட்டோ, அருள்ராஜன்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் .வீரமணி, ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×