search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயல்குடியில் இருந்து கூரான்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோவிலுக்கு சாமி சிலைகளை ஏந்தி பெண்கள்
    X
    சாயல்குடியில் இருந்து கூரான்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோவிலுக்கு சாமி சிலைகளை ஏந்தி பெண்கள்

    சித்திரை உற்சவ கொடை விழா

    சாயல்குடி அருகே சித்திரை உற்சவ கொடை விழா நடந்தது.
    சாயல்குடி

    சாயல்குடி அருகே கூரான்கோட்டை தர்ம முனிஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடை பெற்றது. கடந்த 6-ந்தேதி சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது.  

    தர்ம முனிஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் பச்சை பல்லக்கில் வெள்ளி கம்பள த்தில் வெள்ளி திரிசூலத்து டன் வேட்டை மார்க்கமாக கொண்டு சென்று துஷ்ட நிக்ரஹ பரிபாலன பூஜைகள் நடைபெற்றது.

    ஒயிலாட்டம், கும்மியா ட்டம், தாரை, தப்பட்டை முழங்க பக்தர்கள் புடை சூழ வீதி உலா வந்து தர்ம முனிஸ்வரர் கோவில் சென்றடைந்தது. அதனை தொடர்ந்து கோட்டை விநாயகர், பாலமுருகன் கோட்டை கருப்பசாமி வீரசக்தி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கிட்ட வாடி சென்று அங்கிருந்த கோவிலில் பக்தர்கள் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்தும் பொங்கல்வைத்தும் பக்தர்கள் தங்களது பல்வேறு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    தொடர்ந்து தர்ம முனிஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட 26 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் சாயல்குடி கடலாடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதி யில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கே ற்றனர்.
    Next Story
    ×