என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  பல்லாவரத்தில் பணியின்போது பாதாள சாக்கடை பள்ளத்தில் மண்சரிந்து தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லாவரத்தில் பணியின்போது பாதாள சாக்கடை பள்ளத்தில் மண்சரிந்து தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தாம்பரம்:

  பல்லாவரம், ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கான்கீரிட் போடப்பட்டுள்ளது.

  எனினும் காங்கிரீட்டின் பக்கவாட்டில் உள்ள பள்ளம் முழுமையாக மூடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பாதாள சாக்கடை பணியில் கொல்கத்தாவை சேர்ந்த கூலித்தொழிலாளியான திரேஸ் சர்க்கார்(50) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

  அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண்சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளி திரஸ்சர்க்கார் சிக்கிக்கொண்டார்.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே திரஸே்சர்க்கார் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மண் ஈரப்பதமாக மாறி இருந்ததால் சரிந்து விழுந்து இருப்பது தெரிந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×