என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை ஓடுவதால் துர்நாற்றம் வீசும் மேலவெளிவீதி.
    X
    சாக்கடை ஓடுவதால் துர்நாற்றம் வீசும் மேலவெளிவீதி.

    சாக்கடையால் துர்நாற்றம்

    மதுரை வெளிவீதியில் சாக்கடையால் துர்நாற்றம் வீசுகிறது.
    மதுரை

    மதுரையின் இதயப் பகுதியான பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மேல வெளி வீதி வழியாக ெரயில் நிலையம் மற்றும் டவுன்ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபாதை வழியாக கடந்து செல்வது வழக்கம். 

    எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக சாக்கடை பெருக்கெடுத்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

     இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து பஸ் நிலையத்தில் வந்து இறங்கி ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள் கூறியதாவது-

     பாதாள சாக்கடை கசிவு காரணமாக கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் தொடர்ந்து துர்நாற்றத்துடன் சாக்கடை வெளியேறி வருகிறது இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. நாங்கள் சொந்த முயற்சியில்  இதை சரிசெய்ய முயன்றோம். ஆனாலும் முடியவில்லை. 

    எனவே பொதுமக்களின் நலன் விதி மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர். 

    ஸ்மார்ட் சிட்டியான மதுரையின் மையப் பகுதியில் ஏற்பட்டுள்ள சாக்கடை அடைப்பை உடனடியாக சரிசெய்தால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல ஏதுவாக இருக்கும் என்று பயணிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×