என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
பஸ் மோதி தொழிலாளி பலி
கம்பெனியில் இருந்து மொபட்டில் டீசல் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொழிலாளி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
கம்பெனியில் இருந்து மொபட்டில் டீசல் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொழிலாளி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் வெட்டுக்காட்டுவலசு, மடிக்கார காலனி முதல் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (43). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று தனது மொபட்டில் கம்பெனியில் இருந்து டீசல் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாராயணவலசு பகுதியில் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story