என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட சந்தியா.
பட்டதாரி இளம் பெண் தற்கொலை
பெரிய ெகாடிவேரியில் திருமணமான 3 ஆண்டில் பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்:
பெரிய கொடிவேரியில் திருமணமான 3 ஆண்டில் பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே உள்ள நாட்டாமங்கலம் நவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சந்தியா (23). பி.எஸ்.சி பட்டதாரி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி பகுதியை சேர்ந்த சக்திதாசன் (36) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சக்திதாசன் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.சந்தியா வீட்டில் இருந்து கொண்டு பி.எட் படித்து வருகிறார் திருமணமாகி குழந்தை இல்லாத ஏக்கம் சந்தியாவுக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வெளியில் சென்று வீடு திரும்பிய சக்திதாசன் கதவு திறந்து இருப்பதை கண்டு சந்தியாவை கூப்பிட்டு உள்ளார்.
பதில் ஏதும் வராததால் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சந்தியா மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சந்தியாவின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு சக்திதாசன் தகவல் கொடுத்தார்.
பின்னர் சந்தியாவின் உடலை மின் விசிறியில் இருந்து இறக்கிய உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தியா இறந்து விட்டதாக கூறினர்.
சந்தியாவுக்கு திருமணமாகி மூன்று வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், சந்தியாவின் இன்று உடல் பிரேத பரிசோதனை நடக்க இருப்பதாகவும் பங்களாபுதூர் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






