என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

    சத்தியமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    முருகனுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இதையடுத்து முருகன் மீண்டும் மது குடித்து விட்டு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏறபட்டது. 

    இதனால் தேவி மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தேவி சாணி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். 

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×