என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி

    திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் முன்னிலை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சேகல் கிளை நிர்வாகி சட்டநாதன் வரவேற்றார். இதில் சேகல் கிராமத்தை சேர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் மாற்று கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். 

    அவர்களை மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் வரவேற்றார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன், திருப்புகலூர் முன்னாள் ஊராட்சி மன்ற சுப்பரவேல், பொறுப்பாளர்கள் விடுதலைகனல், சுரேஷ், கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.
    Next Story
    ×