என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே, சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    X
    கராத்தே, சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    நாகை அருகே காமேஸ்வரம் கிராமத்தில் கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவற்றை கிராமங்கள்தோறும் ஊக்குவித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி தற்காப்பு கலை கூடம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. இதன் மூலம் அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலையான கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்கள் செய்து காட்டிய வீர சாகசங்கள். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது அதைத்தொடர்ந்து பயிற்சி முடித்த 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு 9 வகையான கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை கீழையூர் ஒன்றிய செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்

    இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி தற்காப்பு கலை கூட ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவுசல்யா இளம்பரிதி, காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன், வேளாங்கண்ணி தி.மு.க பேரூர் செயலாளர் மரியசார்லி, காமேஸ்வரம் ஊராட்சி நாட்டாண்மை காமராஜ், புனித செபஸ்தியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கியதாஸ் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×