search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையம்
    X
    ரெயில் நிலையம்

    பயணிகளுக்கு அதிகரித்து வரும் தொல்லைகள்

    மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு அதிகரித்து வரும் தொல்லைகள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் மதுரை ெரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் அலங்கார கற்களும் மரங்களும் வைக்கப்படுகின்றன.

    பயணிகள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த இருக்கைகளை பயணிகள் பயன்படுத்த முடியாத வகையில் வெளிநபர்கள் ஆக்கிரமித்து கொ ள்கின்றனர்.  மது போதையில் சுற்றித் திரிபவர்கள், மனநோயாளிகள், பிச்சைக்காரர்கள் மற்றும்சமூகவிரோத கும்பலை சேர்ந்தவர்கள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு குற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் தனியாக வரும் பெண் பயணிகள் பல்வேறு தொல்லைகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் அச்சத்துடன் நுழைவாயிலை கடந்து செல்கின்றனர்.

    மதுரையில் இருந்து மாலை 6. 10 மணிக்கு ராமேசுவரத்துக்கு புறப்படும் பயணிகள் ரெயிலில் மாணவர்கள் கும்பல் கும்பலாக ஏறுகின்றனர். அவர்கள் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தமிட்டும் மோதலில் ஈடுபட்டும் அநாகரீகமாக பேசியும் வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகின்றனர்.இதனால் பெண் பயணிகள் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே ரெயில்வே போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்து ரகளையில் ஈடுபடும் நபர்களை பிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் ரெயில்களில் காதல் ஜோடிகள் ஏறி அநாகரி கமாக நடந்து கொள்வதாகவும் கூறப்ப டுகிறது. இது தொடர்பாகவும்  போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் விரும்புகின்றனர்.
    Next Story
    ×