search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது.
    X
    எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது.

    போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றம்

    திருமருகல் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டன. 

    கீழப்பூதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னமரக்குடி, பெருநாட்டான்தோப்பு, மேலப்புதனூர்ஆகிய பகுதிகளில் சுமார்5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரம் இருபுறங்களிலும் இருந்த கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் சாய்ந்து கிடந்தது

    இதனால் இப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதி க்கு ள்ளாகி வந்தனர். இந்நி லையில் இடையூறாகஇருந்த கருவேல மரங்களை ஊராட்சி மன்ற தலைவர் சத்திய மூர்த்தி, வார்டு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் வெட்டி அகற்றினர்.

    Next Story
    ×