என் மலர்
உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி
இல்லம் தேடி கல்வி
விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கற்றல் நிலையை அறிய ஆய்வு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
இல்லம்தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலை அறிய, ஆய்வு செய்ய தன்னார்வலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வருகிற 6ந்தேதிக்குள் இந்த ஆய்வினை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் இல்லம் தேடி கல்வியின் மாநில திட்ட இயக்கத்தின் சிறப்பு அலுவலர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவிதிட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் ஆகியோர் இந்த பணிகளை தன்னார்வலர்கள் விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தனர்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சீர்செய்ய தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையினை அறிந்து கொள்ளும் வகையில், மாணவர்கள் குறைந்தபட்சம் அடைய வேண்டிய அடைவுகளின் அடிப்படையில் அனைத்துப் பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு இல்லம்தேடி கல்வி கைப்பேசி செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஆய்வினை தன்னார்வலர்கள் வரும் அனைத்து மாண வர்களுக்கும் மேற்கொண்டு, மே 6-ந்தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்த ஆய்வுப் பணிகளை இல்லம் தேடி கல்வியின் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், மல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளித்தனர். அப்போது தன்னார்வலர் மகாலட்சுமி உடனிருந்தார்.
Next Story






