என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆறு.சரவண தேவர்
  X
  ஆறு.சரவண தேவர்

  மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவண தேவர் வலியுறுத்தியுள்ளார்.
  நாகப்பட்டினம்;

  முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

  திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி என்னும் கிராமத்தில் சூர்யா என்ற மாணவன் சாதிய அடையாள கயிறை கையில் கட்டி இருந்ததற்காக இரண்டு சக மாணவர்களால் சாதிவெறியுடன் அடித்து கொலை செய்துள்ளனர். 
  சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அரங்கேறி வருகின்றன. 

  பள்ளி கல்வித்துறை இதற்கு முட்டுக்கட்டை போடாவிட்டால் எதிர்கால தலைமுறையே நாசமாகி விடும். பள்ளி வளாக–த்துக்குள் செல்போன், போதை பொருட்கள் மாணவர்கள் பயன்படுத்தும் வீடியோக்கள் பரவி வருகிறது. ஆசிரியரையே மாணவன் அடிக்க செல்கிறான் ஆசிரியர்கள் மாணவ ர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். தவறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  இப்போது கையில் கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு உயிர் பலியாகி உள்ளது. 

  இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாணவன் சூர்யா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×