என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வாகனம் மோதி 2 வெங்காய வியாபாரிகள் படுகாயம்
குமாரபாளையம் அருகே வாகனம் மோதி 2 வெங்காய வியாபாரிகள் படுகாயமடைந்தர்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தை அடுத்துள்ள பவானி பழனிபுரத்தில் வசிப்பவர் கிருஷ்ணகுமார், (வயது 41). வெங்காய வியாபாரி.
நேற்றுமுன்தினம் அதி்காலை 4 மணியளவில் இவரும், இவரது நண்பர் பத்மநாபன், (57) என்பவரும், திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றனர். கிருஷ்ணகுமார் மோட்டார்சைக்கிளை ஓட்டி செல்ல, பத்மநாபன் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
சேலம் - கோவை நெடுஞ்சாலலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






