என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்கல் சிங்கார வேலருக்கு கார்த்திகையை முன்னிட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    X
    சிக்கல் சிங்கார வேலருக்கு கார்த்திகையை முன்னிட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சித்திரை கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.
    நாகப்பட்டினம்;

    நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது இவ்புகழ்பெற்ற இவ்வாலயத்தில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சிங்காரவேலவர் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கு பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் மஞ்சள் விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×