என் மலர்
உள்ளூர் செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு
நாகூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
ரமலான் நோன்புகடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கவுதியா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சங்க தலைவர் சாஹாமாலிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வ கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நாகூர் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு அரிசி, மளிகை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.1000 மதிப்புள்ள ரமலான் பரிசு தொகுப்புகள் வழங்க ப்பட்டது.
Next Story






