என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
பிரதாபராமபுரம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரத்தில் உள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பூவைத் தேடி ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் பச்சைகாளி, பவளகாளி, நடன காளி, பார்வதி, சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்த நடனக்கலைஞர்கள் நடனம் ஆடியது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்த பின்னர், பக்தர்கள் சுமந்து வந்து பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






