என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு
ஊட்டியில் உணவகங்களில் 100 கிலோ கெட்டுபோன உணவுப் பொருட்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி:
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் கேரளா கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் கலெக்டர் அம்ரித் உணவகங்களில் இருந்த பழைய சிக்கன் உள்பட சுமார் 100 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு சுமார் தலா 2,000 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் இருப்பது தெரியவந்தால் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
Next Story






