என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி
பள்ளிவாசலில் மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய ஊராட்சிகளில் நடுவில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 40 ஆண்டுகளாக 29 நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்து மதத்தைச் சேர்ந்த வேதாரண்யம் ருத்திராபதி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இன்று நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து உணவு நோன்புகஞ்சி அவரது வீட்டில் சமைத்து பள்ளிவாசலுக்கு எடுத்து வந்து பரிமாறி மகிழ்ந்தனர். பின்பு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
Next Story






