என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீதித்துறை, காவல்துறை கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    X
    நீதித்துறை, காவல்துறை கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    நீதி, காவல்துறை கலந்தாய்வு கூட்டம்

    நாகையில் நீதி, காவல்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்: 

    நாகையில் நீதித்துறை மற்றும் காவல்துறை கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர் (நாகை), நிஷா (மயிலாடுதுறை) ஆகியோர் தலைமை தாங்கினர். 

     இதில் காவல்துறை, நீதித்துறை உடைய சந்தேகங்கள், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

     இதன் மூலம் இனிவரும் காலங்களில் அதிக அளவில் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிலைநாட்டப்படும் என்று உறுதி ஏற்கப்பட்டது. 

    மேலும் சிறப்பாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×