என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  எம்.ஜி.ஆர் நகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: குடிபோதையில் 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
  போரூர்:

  சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளைப்பள்ளத்தை சேர்ந்த 15 வயது மாணவி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

  இவரது வீட்டிற்கு எதிரே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (27) கார்த்திக் (21) ஆகிய இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். மாணவி கடந்த ஒரு மாதமாக எதிர் வீட்டில் வசித்து வரும் செல்வத்திடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

  நேற்று மதியம் மாணவி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த செல்வம், கார்த்திக் இருவரும் திடீரென பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பி ஓடி வந்து தனது தாயிடம் கூறினார்.

  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் மீது அவரது தாய் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து செல்வம், கார்த்திக் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×