search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பொது பயன்பாட்டு மையத்தில் குளிர்கால ஆடை தயாரிப்புக்கு நவீன எந்திரங்கள்

    இரண்டாம் கட்டமாக சீனாவிலிருந்து 5 செமி ஜக்கார்டு, 5 புள் ஜக்கார்டு எந்திரங்கள் வந்தன.
    திருப்பூர்:

    பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது பயன்பாட்டு மையம் அமைந்துள்ளது. தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா) , 40 நிட்டிங் நிறுவனங்கள் இணைந்து ரூ.15.30 கோடி மதிப்பில் இம்மையத்தை உருவாக்கியுள்ளது. 

    மையம் அமைய மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. அரசு மானியம் விடுவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து அதிநவீன நிட்டிங் எந்திரங்களை இறக்குமதி செய்து, இம்மையத்தில் நிறுவிவருகின்றனர். 

    முதல் கட்டமாக கடந்த 2021 செப்டம்பரில் தைவானில் இருந்து 10 காலர் நிட்டிங்  எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பொது பயன்பாட்டு மையம் இயக்கத்தை துவக்கியது.

    இரண்டாம் கட்டமாக சீனாவிலிருந்து 5 செமி ஜக்கார்டு, 5 புள் ஜக்கார்டு எந்திரங்கள் வந்தன.மூன்றாவது கட்டமாக ஜெர்மனி நாட்டிலிருந்து, 4 மல்டி பீடர் இன்டர்லாக் எந்திரங்கள், 3 ரிப் எந்திரங்கள் மற்றும் சீனாவில் இருந்து த்ரீ த்ரெட் பிளீஸ் நிட்டிங் எந்திரம் 5 என மொத்தம், 12 எந்திரங்கள் வந்திறங்கின. 

    அந்த எந்திரங்கள் பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டுவருகிறது.

    இதுகுறித்து சிம்கா தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

    நிட்டிங் பொதுப்பயன்பாட்டு மையத்துக்கு 3-ம் கட்டமாக இன்டர்லாக், த்ரீ த்ரெட் பிளேட் பிளீஸ் எந்திரங்கள் வந்திறங்கியுள்ளன. இந்த எந்திரங்கள் குளிர்கால ஆயத்த ஆடை தயாரிப்புக்கு தேவையான, அதிக எடையுள்ள பின்னல் துணி தயாரிப்புக்கு கைகொடுக்கும்.

    இதுவரை வந்துள்ள பெரும்பாலான எந்திரங்கள் திருப்பூரில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, சற்று மேம்படுத்தப்பட்ட எந்திரங்கள். இந்த எந்திரங்கள் நிட்டிங் மெஷின் ஆபரேட்டர் பயிற்சி அளிக்கவும், துணி தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படும். வரும் ஜூன் மாதம் முதல் பொது பயன்பாட்டு மையத்தில், நிட்டிங் மெஷின் ஆபரேட்டர் பயிற்சி துவங்கப்படும். 

    ஏற்கனவே பணிபுரிவோர், புதியவர்கள், ஹெல்பர்களுக்கு, வல்லுனர்களை கொண்டு நிட்டிங் மெஷின் இயக்கம், பழுது நீக்க பயிற்சிகள் அளிக்கப்படும். 

    இதன்மூலம் திருப்பூரில் நிட்டிங் துறை மேலும் வேகம்பெறும். திருப்பூரில் இல்லாத சீம்லெஸ், நிட்டட் டெனீம், ஸ்பேஷன் பேப்ரிக், மேட்ரஸ், கிளவுஸ், ஆட்டோ ஸ்ட்ரைப்பர் போன்ற புதுமையான எந்திரங்கள் அடுத்த 3 மாதத்தில் பொதுபயன்பாட்டு மையத்துக்கு வர உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×