என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுகள்
    X
    ஆடுகள்

    வேப்பூர் ஆட்டு சந்தையில் 4 மணி நேரத்தில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    வேப்பூர் ஆட்டு சந்தையில் ரம்ஜான் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகளும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.

    ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், குளவாய் ,காட்டுமைலூர், சிறுப்பாக்கம் , அடரி, கழுதூர், கண்டப்பங்குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வருகிறார்கள்.

    வருகிற 3ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் இறைச்சிக்காகவும் , வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க திருச்சி, மதுரை ,சென்னை, பாண்டிச்சேரி, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.

    கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு , சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. 9 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை 7500 முதல் 17000 முதல் 20,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    ரம்ஜான் பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 10,000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். ரம்ஜான் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகளும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    Next Story
    ×