என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண் மாதிரிகளை எடுத்து நடமாடும் மண்பரிசோதனை அதிகாரியிடம் வழங்கிய விவசாயி.
நடமாடும் மண் பரிசோதனை முகாம்
வேதாரண்யம் அருகே நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி, ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் பரிசோதனைக்கு தங்கள் வயலில் இருந்து தண்ணீர் மற்றும் மண் மாதிரிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் யோகேஷ், நடமாடும் மண் பரிசோதனை மைய அலுவலர் சுதா, தோட்ட கலை உதவி அலுவலர் நெகதீஸ்வரி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் விவசாயிகள் பயிர் காப்பீடு உழவர் கடன் அட்டை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த அறிமுக வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பிரதமர் கவுரவ நிதி திட்டம் சரிபார்ப்பு நுண்ணுயிர் நீர்ப்பாசன திட்டம் மண் மாதிரி பரிசோ தனை மாதிரி சேகரிப்பு ஆத்மா இறைவன் திட்ட விலக்கம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் விவசாயத் துறையினர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story






