என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சஸ்பெண்டு
  X
  சஸ்பெண்டு

  கமுதி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் சஸ்பெண்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
  கமுதி:

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமபுரத்துக்கு உட்பட்ட உடையநாதபுரத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது43). இவர் மதுரையில் உள்ள ஒருஉணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் உடையநாதபுரத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற அவர் விண்ணப்பித்துள்ளார்.

  அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு அபிராமபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார் என்பவர் ரூ.3,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகலிங்கம் இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் .

  அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி நாகலிங்கம் பணம் கொடுக்கச் சென்ற போது அபிராமபுரத்தைச் சேர்ந்த இடைத்தரகர் சேகர் (32) என்பவரிடம், உதவி பொறியாளர் விஜயகுமார் பணம் கொடுக்கச் சொல்லி உள்ளார்.

  அதன்படி சேகரிடம் ரூ.3,500 கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சேகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

  மேலும் நாகலிங்கத்துடன் பொறியாளர் பேசிய கைபேசி உரையாடல் பதிவுகள் அடிப்படையில் உதவி பொறியாளர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் லஞ்சம் பெற்றது உறுதியான நிலையில் மின் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

  இதைத் தொடர்ந்து பொறியாளர் விஜயகுமார் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×