என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணிக்கம் தாகூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து,
    X
    மாணிக்கம் தாகூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து,

    மருத்துவ முகாம்

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டார பொது மக்கள் பயன்பெறும் வகையில் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா மற்றும்  கண்காட்சிகள்,டெங்கு தடுப்பு, உணவு பாதுகாப்பு, தொழுநோய், காசநோய், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், யோகா, சித்தா, ஆயுர்வேதம், தேசிய வளர் இளம் பெண்கள் திட்டம், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம், கொரேனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாமை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் (பொறுப்பு தெலுங்கானா), விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான   மாணிக்கம் தாகூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பயனாளி களுக்கு தேசிய மருத்துவ அடையாள  அட்டைகளை வழங்கினார். 
    அவர் பேசுகையில்,  கிராமப்புறங்களில் பெருமளவில் மருத்துவ சிகிச்சை கிடைக்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையை அறிந்து , முதல்வர் மு.க. ஸ்டாலின் கிராமப்புறங் களுக்கு வீடுதேடி மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் வகுத்து அதற்கான பணியை தொடங்கி வைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கிறது. 

    கிராமப்புற மக்கள் இனி வீட்டில் இருந்தபடியே அனைத்து மருத்துவ சிகிச்சை களையும் பெற்றுக் கொள்ளலாம். உணவு திட்டத்தை கொண்டு வந்து காமராஜர் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதை போன்று, வீடு தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவத் தில் அமைதி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
    இந்த முகாமில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன், கள்ளிக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் பழனிகுமார், ராஜ்குமார், வட்டார தலைவர்கள் சேகர், பாண்டியன், காசிநாதன், சக்கரை, வினோத் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×