என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
டி.ஜி.புதூர் நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்:
டி.ஜி.புதூர் நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் அங்கனகவுண்டன் புதூர் அருகே உள்ள செங்கோட்டையன் நகரை சேர்ந்தவர் பசுவய்யா (65).
சம்பவத்தன்று பசுவய்யா தனது வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக சைக்கிளில் டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பி சத்தியமங்கலம் சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பசுவய்யா சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் அவர் மீது மோதியது.
இதில் பசுவய்யாக்கு தலையில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே பசுவய்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கார்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






