என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி வங்கி ஊழியர் பலி
ஆலம்பாடி காவிரி ஆற்றங்கரையோரத்தில் ஒதுங்கிய வங்கி ஊழியரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலம், பெங்களூரு நந்தினி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் ஜேம்ஸ் பவுல் (வயது 22). தனியார் வங்கியில் டேட்டா ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர், ஆலம்பாடி காவிரியாற்றில் குடும்பத்துடன் குளித்தார்.
அப்போது ஜேம்ஸ் பவுல் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து, அவரின் பெற்றோர் ஒகேனக்கல் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஜேம்ஸ் பவுலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை, ஆலம்பாடி காவிரி ஆற்றங்கரையோரத்தில் அவரின் உடல் ஒதுங்கியது. போலீசார் உடலை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story