search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலத்தில் கலப்பட டீசல் கடத்தி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது- டிரைவர், உரிமையாளர் கைது

    சேலத்தில் கலப்பட டீசல் கடத்தி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக டிரைவர், உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மூலப் பிள்ளையார் கோவில் பரமசிவம் காடு பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இந்த இடத்தை செவ்வாய்ப்பேட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 3 மாதமாக ரூ.10 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்து டிராஸ்போர்ட் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு டேங்கர் லாரி அங்கு வந்தது. அப்போது அந்த லாரியில் மேல் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கும், சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    பின்னர் அன்னதானப்பட்டி போலீசார் லாரியை திறந்து பார்த்தபோது அதில் 10 ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் வந்து பார்த்தபோது வெங்கடேசன் மும்பையிலிருந்து கலப்பட டீசல் வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து உரிமையாளர் வெங்கடேசன் மற்றும் லாரி டிரைவர் சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரி பறிமுதல் செய்தனர்.

    இந்த தீ விபத்தில் வேறோரு லாரி டிரைவரான செல்வராஜிக்கு காயம் ஏற்பட்டது. அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×