என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேமநிதியை உயர்த்தியதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
    X
    சேமநிதியை உயர்த்தியதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

    வழக்கறிஞர்கள் சேமநல நிதி உயர்வு-முதலமைச்சருக்கு நன்றி கூறி வக்கீல்கள் கொண்டாட்டம்

    வழக்கறிஞர்களின் சேமநல நிதியை உயர்த்தி வழங்கியதற்கு மயிலாடுதுறையில் முதலமைச்சருக்கு நன்றி கூறி வக்கீல்கள் கொண்டாடினர்.
    தரங்கம்பாடி:

    வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இதற்கு வரவேற்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் மற்றும் நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராமசேயோன் தலைமையில் நீதிமன்றம் முன்பு பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டும் கொண்டா-ட்டத்தில் ஈடுபட்டனர்.

    2012-ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் சேமநல நிதி தற்போது தமிழக முதல்வரால் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    இதில் மாவட்ட வழக்றிஞர்கள் அமைப்பாளர்கள் சிவதாஸ், அருள்தாஸ், கோபி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×