என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையம்
சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்தவரால் பரபரப்பு
சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விமானம் சென்னை வந்தவுடன் விமான நிறுவனம் சார்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து நேற்று இரவு 164 பயணிகளுடன் சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர் என்பவர் திடீரென தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட் எடுத்து புகை பிடிக்கத் தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக விமான பணிப்பெண்கள் வந்து அவரை கண்டித்தனர். மேலும் விமானம் சென்னை வந்தவுடன் விமான நிறுவனம் சார்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சேவியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story






