search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் தமிழிசை அரவிந்தர் பற்றிய புத்தகத்தை பரிசாக வழங்கியும், ரங்கசாமி பூரணகும்பம் அளித்தும் வரவேற்றனர்
    X
    கவர்னர் தமிழிசை அரவிந்தர் பற்றிய புத்தகத்தை பரிசாக வழங்கியும், ரங்கசாமி பூரணகும்பம் அளித்தும் வரவேற்றனர்

    புதுவை வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்ற தமிழிசை -ரங்கசாமி

    விமான நிலைய வாசலில் பா.ஜனதா தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடும், ஆரவாரத் தோடும் வரவேற்றனர். அமித்ஷாவுக்கு மலர்களை துவவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வந்தார்.

    சென்னை ஆவடியில் இருந்து 9.36 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அமித்ஷா புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 10.10 மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன் குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா பிரமுகர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வரவேற்றனர்.

    விமான நிலைய வாசலில் பா.ஜனதா தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடும், ஆரவாரத் தோடும் வரவேற்றனர். அமித்ஷாவுக்கு மலர்களை துவவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்களின் வரவேற்பை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். பின்னர் மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வந்து அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்தார். மத்திய மந்திரி அமித்ஷாவை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு மகான் அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதியில் மலர் வைத்து அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் மகான் அரவிந்தர், அன்னை ஆகியோரின் அறையை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை பல்கலைக் கழகத்துக்து சென்று அங்கு நடந்த மகான் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்றார். பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி காலை 10 முதல் 10.20 மணி வரை விமான நிலை சாலை, என்.சி.சி., தலைமை அலுவலகம், நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, குளூனி பள்ளி, லதா ஸ்டீல் அவுஸ் சந்திப்பு, மடுவுபேட் சந்திப்பு, சிவாஜி சிலை, முத்தியால் பேட்டை ஏழை மாரியம்மன் கோவில், முத்தியால்பேட்டை காந்தி வீதி, அஜந்தா சிக்னல், எஸ்.வி. பட்டேல் சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    காலை 10.35 முதல் 10.40 மணி வரை செஞ்சி சாலை, மரைன் வீதி, அரவிந்தர் ஆசிரம் பகுதியிலும், 10.50முதல் 11 மணி வரை செயின்ட் லூயிஸ் வீதி, பழைய சாராய ஆலை, எஸ்.வி. பட்டேல் சாலை, அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை காந்தி வீதி, கோட்டக்குப்பம், இ.சி.ஆர்., ரவுண்டானா, பெரிய முதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, புதுவை பல்கலைக்கழகம் வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    மதியம் 12.30 முதல் 12.40 மணி வரை பிள்ளைச்சாவடி, பொம்மையார்பாளையம், பெரியமுதலியார்சாவடி, கோட்டக்குப்பம், முத்தியால்பேட்டை, அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, கவர்னர் மாளிகை பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    இன்று மதியம் 1.55 முதல் 2 மணிவரை செஞ்சி சாலை, புஸ்சி வீதி, கம்பன் கலைய ரங்கம், 3.35 முதல் 3.45 மணிவரை அண்ணாசாலை சந்திப்பு, மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா சதுக்கம், பா.ஜனதா தலைமை அலுவலக பகுதியிலும், மாலை 4.50 முதல் 5 மணி வரை இந்திரா சதுக்கம், 100 அடி சாலை, ராஜீவ் சதுக்கம், கொக்குபார்க் சந்திப்பு, லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு, லாஸ்பேட்டை விமான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    புதுவைக்கு வந்த அமித்ஷாவை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட அலங்கார வளைவுகள், கொடி, தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மத்திய மந்திரி வருகையையொட்டி நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர். அவர் செல்லும் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தர். புதுவை முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×