என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    முககவசம் அணியாமல் சென்றால் அபராதம்

    முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என மதுரை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் “மாஸ் கிளினிங்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். 

    அவர் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து குப்பைகளை சேகரித்தார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது-:&

    மதுரை மாவட்டத்தில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால், சம்பந்தப்பட்ட வருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் பொது இடங்களில் முகக் கவசத்துடன் செல் கிறார்களா? என்பதை வருகிற 25ந்தேதி (திங்கட்கிழமை) முதல் கண்காணிக்க உள்ளோம்.

    போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் ஒருங்கிணைத்து கண் காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த உள்ளோம். முகக்கவசம் அணிவதை கண்காணிக்கும் வகையில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப் படும்.

    வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×