என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
மகாலட்சுமி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள,கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ளது மகாலட்சுமி நகர். பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் நடமாடும் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்படுகிறது.
மேலும் மகாலட்சுமி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள, கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டப்படுகிறது. பிறகு அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, பயன்படாத கிணறுகள் மற்றும் பாறை குழிகளில் கொட்டப்படுகிறது.
எனவே மகாலட்சுமி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்தால் மட்டுமே குப்பைகளால் ஏற்படும் பிரச்சினைகளும் சுகாதார சீர்கேடும் சரியாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story






